நீலகிரி : இந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு தீயால் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதிக அளவு கட்டிடங்கள் காரணமாகவும் நீலகிரி வேகமாக அழிந்து வருவதாக மத்திய அரசின் மண் மற்றும் நீர் ஆராய்ச்சியாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பசுமை நிறைந்த காடுகள், காணும் இடம் எல்லாம் வான் உயர்ந்த மரங்கள், நீர் அருவிகள், மேகமூட்டம் என குளுகுளு மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்தால்தான் சமவெளி பகுதியான ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும். ஆனால், சில வருடகாலமாக நீலகிரி மலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதாலும், நீலகிரியில் 96 சதவீதம் விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், மண்வளம் பாதிக்கப்பட்டு சிறுசிறு மழைகள் பெய்தால் கூட நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இத்துடன் மரங்கள் 22 சதவீதம் வெட்டி அழிக்கப்பட்டதாலும், இந்த ஆண்டு வரலாறு காணாத காட்டுத்தீ ஏற்பட்ட காரணத்தாலும் அதிகளவு காற்று மாசு அடைந்திருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உதகையில் உள்ள மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது, சுற்றுச்சூழல் தினம் குறித்து மண் மற்றும் நீர்வளம் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மணிவண்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "நீலகிரி மாவட்டம் ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் முக்கிய மலைத் தொடராக உள்ள நீலகிரியில் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மேலும், அதிக அளவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் காற்று மாசுபாடு அடைகிறது. அதோடு, அரிய வகை மரங்கள் அழிக்கப்பட்ட காரணத்தால் நீலகிரி வேகமாக அழிந்து வருகிறது," என்றார்.