Breaking : நீட் தேர்வில் தோல்வி : மனவிரக்தியால் திருப்பூரில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் : திருப்பூரில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூரில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ரிதுஸ்ரீ திருப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். இந்த நிலையில், மருத்துவ கல்வி பயில விரும்பிய அவர், கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், (மொத்தம் 785 மதிப்பெண்களுக்கு) குறைந்தபட்சம் 134 எடுத்தால் தேர்ச்சி என்ற நிலையில், ரிதுஸ்ரீ வெறும் 68 மதிப்பெண்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தார். இதனால், மனவிரக்தியடைந்த அவரை, பெற்றோர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். 

இருப்பினும், விரக்தியில் இருந்து மீளாத ரிதுஸ்ரீ இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிதுஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா (17) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து, வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் பட்டுக்கோட்டை இசபெல்லா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...