நீலகிரி : குன்னூர் அருகே பெல்காம் எஸ்டேட் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் மண்சாலையில் படுத்துக் கிடக்கும் கரடிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
நீலகிரி : குன்னூர் அருகே பெல்காம் எஸ்டேட் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் மண்சாலையில் படுத்துக் கிடக்கும் கரடிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் சோகத்தொரைப் பகுதியைச் சுற்றிலும் வனப் பகுதிகள் தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இதில், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள பெல்காம் எஸ்டேட் பகுதியில் கரடி ஒன்று நடைபாதை சாலையில் உடல்நலக்குறைவால் படுத்துக் கொண்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன அதிகாரிகள் கரடிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர், அதற்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பெல்காம் எஸ்டேட் செல்லும் மண் சாலையில் கரடி படுத்திருப்பதால், அந்த சாலை வழியாக தேயிலைத் தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.