கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள் சார்பில் கோவையில் இன்று நடைபெற்ற 5 கி.மீ. பசுமை மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈஷா பசுமை கரங்கள் திட்டம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2019-ம் ஆண்டில் 50 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கோவையில் ஈஷா பசுமை கரங்கள், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், ஆர்.ஏ.எஃப், யங்க் இந்தியன்ஸ், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், டை கோவை அமைப்பு ஆகியவை சார்பில் பசுமை மாரத்தான் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஈஷா தன்னார்வலர்கள், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், ஆர்.ஏ.எஃப் படை வீரர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், கோவை தடகள சங்கத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவந்த் குமார், அதிவிரைவு படை 105-வது பட்டாலியன் துணை காமாண்டெண்ட் சுந்தர குமார், கங்கா மருத்துவமனையின் இயக்குநர் ராஜசபாபதி, ஃப்ரண்ஸ்டெக் பெல்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் இயகோகா. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த 5 கி.மீ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் வ.உ.சி மைதானத்தில் இருந்து எல்.ஐ.சி கார்னர், கே.ஜி. தியேட்டர் வழியாக மீண்டும் வ.உ.சி மைதானத்தை அடைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதுதவிர, சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, வேலூர், மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரக் கன்றுகள் நடும் விழாக்கள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றன.