கோவையில் பச்சிளம் குழந்தை புதரில் கண்டெடுப்பு : குழந்தையின் பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை

கோவை : சித்தாபுதூர் அருகே பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், புதரில் கிடந்த குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையின் தாய் யார்..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : சித்தாபுதூர் அருகே பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், புதரில் கிடந்த குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையின் தாய் யார்..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் சாலை ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் தூக்கி வீசிச் செல்லும் நிலைமை அதிகரித்து விடுகிறது. இதில், ஒரு சிலர் குடும்ப சூழலை காரணம் காட்டி இந்த கொடும்பாவச் செயலில் ஈடுபடுகின்றனர். இன்னும், சிலர் தகாத உறவின் காரணமாக பிறந்த குழந்தையை தூக்கி எறிந்து செல்கின்றனர்.



இந்த நிலையில், இன்று கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் இருக்கும் அன்னபூர்ணா லே-அவுட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் சென்று அங்குள்ள புதரில் பார்த்த பொழுது பிறந்த குழந்தை ஒன்று அழுதுக் கொண்டிருந்தது. பின்னர், இது குறித்து அருகே இருந்தவர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். 

இதனிடையே, போலீசார் நடத்திய விசாரணையில் மனோன்மணி என்பவர்களது இல்லத்தில் நேற்று இரவு கோத்தகிரியை சேர்ந்த இலக்கியா என்கிற திருமணமாகாத பெண் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இலக்கியாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மனோன்மணி, குழந்தை பிறந்தது பற்றி தனக்கு தெரியவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் மனோன்மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணையும் விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து, இந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...