கோவை : உடுமலை ரயில்நிறுத்தத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய ரயில்வே வாரிய தலைவரிடம் பொள்ளாச்சி தி.மு.க. எம்.பி. சண்முகசுந்தரம் வழங்கினார்.

டெல்லியில் உள்ள ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே போர்டு சேர்மன் திரு.வினோத் குமார் யாதவை நேற்று சந்தித்த பொள்ளாச்சி தி.மு.க. எம்.பி. சண்முகசுந்தரம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தற்போது, தற்காலிகமாக இயங்கி வரும் மதுரை - பழனி, பழனி - மதுரை ரயில் சேவையை, கோவை - மதுரை இடையிலான நிரந்தர சேவையாக இயக்க வேண்டும். கோவை - செங்கோட்டை பயணிகள் ரயில் பழனி, மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக இயக்கப்பட வேண்டும். இதேபோல, கோவை - ராமேஸ்வரம் (இரவுநேர சேவை) சேவையை பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக மாற்றி இயக்க வேண்டும். பொள்ளாச்சி - தாம்பரம் (சென்னை) பகல் அல்லது இரவு நேர ரயில் பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி மார்க்கமாக இயக்க வேண்டும். இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சரக்குகளை தேக்கி வைக்க குடோன் மற்றும் காத்திருப்பு அறை அமைக்க வேண்டும்.
மேலும், உடுமலைப் பேட்டை நிறுத்தத்தில் பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் நிறுத்தி வைக்கும் நேரத்தை 2 நிமிடங்களிலிருந்து 4 நிமிடங்களாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியிருந்தார்.