கோவையில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கோவை : கோவையில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எளிதில் அணுகக்கூடியதும், சுற்றுலாப் பயணிகள் விரும்பக்கூடிய பகுதியாகவும் கலச்சாரம் மிக்க பகுதியாகவும் விளங்கி வருகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சொகுசு விடுதிகள் உணவகங்கள் மற்றும் பண்ணை வீடுகள், விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அமையப் பெற்றுள்ள அனைத்து வகையிலான தங்கும் விடுதிகள் விதிமுறைகளின்படி அமையப் பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெற்றிருப்பதுடன், அனுமதி பெற்றுள்ள விடுதிகள் உரியகாலத்தில் தங்களின் அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும், சொகுசு விடுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் நெறிமுறைகளை மீறாமலும், விடுதிகள் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

இந்த நிலையில், அனுமதியின்றி நடத்தப்படும் விடுதிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்திட வட்ட அளவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. களஆய்வின் போது முறையான அனுமதி பெறாத சொகுசு விடுதிகள் கண்டறியப்படும் நிலையில், சட்டப்படி அந்த விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...