கோவை : பொள்ளாச்சி அருகே கெடுமேடு வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோலார்பட்டி கிராமம் - தேசிய நெடுஞ்சாலை கெடுமேடு அருகில் கார் விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த கோவை தெற்கு வட்டம் மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ், அவருடையை மனைவி சித்ரா, குழந்தைகள் நந்தனா, சித்ரா மற்றும் பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி லதா, அவருடைய குழந்தைகள் செல்வன் கவியரசு, தாரணி மற்றும் சுப்பிரமணியம் என்பவரின் மனைவி சுமதி ஆகிய 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
சாலை விபத்தில் உயிரிழந்த மேற்கண்ட 8 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என குறிப்பிட்டுள்ளார்.