கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ரயில்நிலையத்திற்கு வந்த பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே ஊழியர்கள், அறம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், ரூட்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர், ரயில்நிலையத்தின் நடைபாதைகளில் நடந்த பேரணியின் மூலம், மரம் வளர்ப்பதன் அவசியம், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும், தூய்மையான கோவையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ரயில் பயணிகளிடத்தில் ஏற்படுத்தினர். தொடர்ந்து, ஆர்.பி.எஸ். அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டனர்.

மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரயில்நிலையத்தின் முன்பு பாரம்பரிய இசைகளை வாசித்தனர். அப்போது, கோவை ரயில்நிலைய வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தும் பொருட்டு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறந்த தருணமாக, நகரை தூய்மைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ரோஜா பூவை கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.