கோவை : புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் சிகிச்சை கொடுத்ததால், பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ் மற்றும் நித்யா தம்பதியினர். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தனது மனைவிக்கு ஜெனிசிஸ் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர். ஆனால், பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கும் பொழுது மருத்துவர் சந்திரகலா இல்லாமல், உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும், முதலில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பொழுது முதன்மை மருத்துவர் சந்திராவிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை புகைப்படங்களாக அனுப்பி, விவரங்களைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர், குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அவர்களுக்கு சாதகமான தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், தற்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழல் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஜெனிசிஸ் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.