கோவை : அமிர்தா பல்கலைக்கழகமும், தேசிய கிராமப்புற மேம்பாட்டு பஞ்சாய்த்து ராஜ் நிறுவனமும் இணைந்து கிராமப்புற மேம்பாட்டுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, கிராமப்புறத்தில் வாழும் மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பணியில் அமிர்தா பல்கலைக்கழகம் ஈடுபடும். மேலும், கிராமப்புற மக்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, இணையவழி கற்றலை மேம்படுத்தல், கிராமப்புற தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், சுகாதாரத்தை மேம்படுத்தல், ஆற்றல் மேலாண்மை ஆகிய பயிற்சிகளை பல்கலைக்கழகம் வழங்கும். இது தொடர்பாக, ஸ்ரீ மாதா அமிர்தாமாயி தேவி கூறுகையில், “இத்தகைய ஒப்பந்தங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட பெரும் உதவியாக இருக்கும்,” என்றார். இது குறித்து தேசிய கிராமப்புற மேம்பாட்டு பஞ்சாய்த்து ராஜ் நிறுவனம் டைரக்டர் ஜெனரல் ரெட்டி கூறுகையில், “அமிர்தா பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கிராமப்புற மக்கள் பயன்படுத்தினால், அது கிராமப்புற சூழலையே மாற்றி அமைக்கும்,” என்றார்.
இது தொடர்பாக, அமிர்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வெங்கட் ரங்கன் கூறியதாவது :- அமிர்தா பல்கலைக்கழகத்தின் “ஆய்வகத்தில் வாழும்” திட்டத்தின்கீழ், பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று, அங்கேயே வாழ்ந்து அவர்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான தீர்வை கண்டறிய வேண்டும். இதற்காக மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் கிராமப்புறத்துக்கு செல்வதன் மூலமாக, அங்கு நிலவும் பல்வேறு வகையான பிரச்னைகளைக் கண்டு, அவற்றுக்கான தொழில்நுட்பம் ரீதியிலான தீர்வை கண்டறிய இயலும். இதுவரை பல்கலைக்கழகம் சார்பில் 21 மாநிலங்களில் 150 ப்ரோஜெக்ட்டுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மொத்தம் 60 ஆயிரம் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ், தேசிய கிராமப்புற மேம்பாட்டு பஞ்சாய்த்து ராஜ் நிறுவனம் செயல்படுகிறது. கிராமப்புற சூழலை மேம்படுத்தும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.