கோவை : மேட்டுப்பாளையத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் முகேஷ் என்பவர் மிஸ்டர் கோவையாக தேர்வு செய்யபட்டார்.

கோவை மாவட்ட அமச்சூர் பாடிபில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோல்டு ஸ்டார் ஜிம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியினை நடத்தியது. மேட்டுப்பளையத்தில் உள்ள சி.எஸ்.ஜ பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கட்டுடலை வெளிபடுத்தினர்.

50 கிலோ மற்றும் 55 கிலோ எடை பிரிவு முதல் 85 கிலோ எடை பிரிவு வரை தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தங்கள் கட்டு உடல்களை இசைக்கு ஏற்றவாறு அழகுபடுத்தி மேடையில் வெளிபடுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில், 50 கிலோ எடை பிரிவில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோல்டு ஜீம் மாணவர் மணி என்பவர் முதல் பரிசினை பெற்றார். 55 கிலோ எடை பிரிவில் அதே ஜிம்மினை சேர்ந்த கனகு என்பவர் தட்டி சென்றார். இதனையடுத்து, ஒட்டுமொத்த ஓவரால் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த எம்.எஸ்.பி ஜிம் மாணவர் முகேஷ் வெற்றி பெற்று மிஸ்டர் கோவையாக தேர்ந்தெடுக்கபட்டார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.