நீலகிரி : நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜூன் மாதத்திற்கான மாதாந்திர குறைந்தபட்ச விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் தேயிலை ஏலத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதன்படி, மே மாத ஏலத்தின் அடிப்படையில், ஜூன் மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு, 15 ரூபாய் 43 பைசா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேயிலை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விலையினை விவசாயிகளுக்கு தேயிலை தொழிற்சாலைகள் வழங்குவதை அதிகாரிகள் கண்காணித்து, இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்கு குறித்த புகார்களை விவசாயிகள் தேயிலை வாரியத்திற்கு தெரிவிக்கலாம், இவ்வாறு, அதில் தேயிலை வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 15 ரூபாய் 98 பைசாவும், மே மாதத்தில் 15 ரூபாய் 75 பைசாவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 ரூபாய் 43 பைசாவாக விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.