கோவை : நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
கோவை : நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

குறிப்பாக, பூமார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான்தக்னி சுன்னத் ஜமாப் பள்ளி வாசலில் இன்று காலை ரம்ஜான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கரும்புக்கடையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இதைதொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு இனிப்புகள், அரிசி, நெய், சமையல் எண்ணெய் ஆகியவற்றை கொடுத்து உதவினர்.