நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட்டின் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடுமலை கவுசல்யா, மன்னிப்பு கோரியதால் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட்டின் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடுமலை கவுசல்யா, மன்னிப்பு கோரியதால் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உடுமலை கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், கண்டோன்மென்ட் பணியில் இருந்து அவரை பணியிடை நீக்கம் செய்து கண்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்ம உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு உடுமலை கவுசல்யா மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், கவுசல்யாவின் கடிதத்தை ஏற்று மீண்டும் பணி வழங்கியதாக கண்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி பி.ஹரிஷ்வர்மா இன்று தெரிவித்தார்.