தமிழக மின்வாரியத்துறை அதிகாரிகளாகப் பிற மாநிலத்தவர்களின் நியமனத்தைக் கண்டித்து கோவையில் த.பெ.தி.க.வினர் போராட்டம்

கோவை : தமிழக மின்சார வாரியத் துறையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த 38 பேரை அதிகாரிகளாக நியமித்துள்ளதைக் கண்டித்து கோவை மண்டல தலைமை மின்வாரிய அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : தமிழக மின்சார வாரியத் துறையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த 38 பேரை அதிகாரிகளாக நியமித்துள்ளதைக் கண்டித்து கோவை மண்டல தலைமை மின்வாரிய அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழ்நாடு மின்வாரியத்தில் சமீபத்தில் 325 துணை மின் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட வெளிமாநிலத்தை சேர்ந்த 38 பேர் மின்வாரிய அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மண்டல அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் இந்த முற்றுகைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 



இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது, மின் வாரிய அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மண்டல மின்வாரிய அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



அப்போது, மின்வாரியத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிய அனுமதித்துக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வெளிமாநிலத்தவர் பணியில் சேருவதால் தமிழகத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, மோடியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டத்தை தமிழக அரசு அப்போது கொண்டு வந்தது. முதற்கட்டமாக, தற்போது 38 துணை மின் பொறியாளர் பணியிடங்களில் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநில அரசு பணிகளில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் சேர்ந்தவர்களுக்கு இடமில்லை என்ற சட்டத் திருத்தத்தை உடனடியாக தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 



இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...