நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் நிர்வாகப் பகுதியில் மாவட்டத்தில் முதல் நவீன எரியூட்டு மயானத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு மூலம் சடலம் எரியூட்டும் மயானம் அமைக்கப்பட்டது. இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மயானம் பழமை அடைந்த காரணத்தினால் இதனைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நீலகிரி மாவட்டத்தின் முதல் நவீன எரியூட்டு மயானத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கண்டோன்மெண்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா மற்றும் ராணுவ அதிகாரிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நவீன எரியூட்டு மயானத்தின் வளாகத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து இடத்தை பொலிவு படுத்தினர். இதனிடையே, எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டு மயானம் அமைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.