ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க திட்டம் : போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- சி40 என்ற பன்னாட்டு அமைப்பு மூலம் சென்னை, கோவை, மதுரையில் மின்சாரப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் சென்னையில் முதல்முறையாக மின்சாரப் பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். மேலும், ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்துகள் மற்றும் 2,000 மின்சாரப் பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரப் பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...