கோவை : 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் பாரதியாரின் முண்டாசு காவி நிறத்தில் இருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழக அரசின் புதிய பாடத்தின்படி வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தமிழ் பாடபுத்தக அட்டையில் இடம் பெற்றுள்ள பாரதியார் வெள்ளை முண்டாசுக்கு பதில் காவி நிறத்திலான முண்டாசு கட்டியிருப்பது போன்று அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கோபிச் செட்டிபாளையம் செல்வதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார்.
அப்போது, அவரிடம் 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் பாரதியாரின் முண்டாசு காவி நிறத்தில் இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப் பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் அங்கிருந்து வேறு வழியாக திரும்பிச் சென்று, போலீசார் மற்றும் கட்சியினர் புடைசூழ தனது காரை வரவழைத்து வேகவேகமாக ஏற முற்பட்டார். அப்போது, மும்மொழி கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய போது, "வம்பில் மாட்டி விட வேண்டாம். "எல்லாம் அமைதியாக போயிக் கொண்டிருக்கிறது," எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
பாரதியாரின் முண்டாசு, மும்மொழிக் கொள்கை ஆகியவை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து பதில் அளிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சென்றது கோவை விமான நிலையத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடத்தில் ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது.