உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

கோவை : உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை : உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். 



உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஓதுக்கீடு பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். 



இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். 



கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 37 பேரூராட்சி, 227 ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...