கோவை : கோவையில் நில விற்பனையில் ரூ. 19 லட்சம் மோசடி செய்ததாக வயதான தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காந்திபுரம் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜி. சீனிவாசன். இவரிடம் சரவணம்பட்டி, விசுவாசபுரத்தில் வசித்து வரும் குடும்ப நண்பர்களான ஆர். மணி (68), வனஜா (51) ஆகிய தம்பதிகள், மகளின் திருமணத்திற்காக இடத்தின் பத்திரத்தை வைத்து ரூ. 19 லட்சம் பெற்றுள்ளனர். மகளின் திருமணம் முடிவடைந்ததையடுத்து, சீனிவாசன் மணியின் வீட்டிற்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்த மணி மற்றும் வனஜா தம்பதியினர், பத்திரம் தொலைந்து விட்டதாகக் கூறி, சர்பதிவாளர் அலுவலகத்தில் நகல் பத்திரத்தை முறையாகப் பெற்றுள்ளனர்.
பின்னர், அந்த இடத்தை தனது மற்றொரு மகளான சுகன்யா என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்யப்பட்டு, சென்னையைச் சேர்ந்தவருக்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்கப்பட்டு விட்டது. இதில், தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த சீனிவாசன், கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், மணி மற்றும் வனஜா தம்பதியினரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.