மேட்டுப்பாளையம் அருகே 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை : திருடர்களின் கைவரிசையாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது திருடர்களின் செயல்களாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது திருடர்களின் செயல்களாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குட்டையூர் அருகே உள்ள குறிஞ்சி நகர், சபரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அண்மை காலமாக பொதுமக்கள் அதிகமாக குடியேறி வருகின்றனர். காரமடை பேரூராட்சிக்குட்பட்ட இந்தப் பகுதியில் வீடுகள் ஒருசேர இல்லாமல் தனித்தனியாக இருந்து வருகிறது. இந்தக் குடியிருப்புகள் தனித்தனியே இருப்பதால் பாதுகாப்பிற்காக அனைத்து வீடுகளிலும் காவலுக்காக நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் இன்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 



இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கு கட்டி வைக்கப்பட்ட நாய்களுக்கு இறைச்சிகள் மூலம் விஷம் கலந்த மாமிசங்களை வீசி சென்றுள்ளனர். இதனை உட்கொண்ட நாய்கள் இன்று காலை முதல் அடுத்தடுத்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து காரமடை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், உயிரிழந்த நாய்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தனித்தனியாக உள்ள வீடுகளை குறிவைத்து இந்த சம்பவம் நடந்துள்ளதால், திருட்டு சம்பவங்களுக்கு நாய்கள் இடையூறாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம். ஏற்கனவே, இந்தப் பகுதிகளில் தனியாக உள்ள வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க காவல்துறையினர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்," என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...