சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் : திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு

திருப்பூர் : திருப்பூரில் சீட்டு நடத்தி சுமார் ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி பணத்தை பறிகொடுத்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் சீட்டு நடத்தி சுமார் ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி பணத்தை பறிகொடுத்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



திருப்பூர் - பல்லடம் ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் வஞ்சீஸ்வரி, அவரது சகோதரியான பூங்கொடி, சாமிநாதன் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுமார் 200 நபர்களை வைத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில், பணம் செலுத்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல், கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இழுத்தடித்து வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட வஞ்சீஸ்வரிக்கு சொந்தமான கணபதிபாளையத்தில் உள்ள வீட்டை ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு, பூங்கொடி, வஞ்சீஸ்வரி, சாமிநாதன் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர்.



இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன் மனு அளித்திருந்தனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பணத்தை பறிகொடுத்த மக்கள் அலட்சியமாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனிடையே, மோசடியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான அங்கமுத்து என்பவர் கடையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அவரை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கமுத்துவை விசாரணைக்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...