கவுண்டம்பாளையம் அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 252 குடியிருப்புகளை அகற்றும் பணி தொடக்கம்

கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 252 குடியிருப்புகளை காவல்துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி நகரமைப்புத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.


கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 252 குடியிருப்புகளை காவல்துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி நகரமைப்புத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம், ஜீவாநகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வண்டித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 252 வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நகரமைப்பு துறையினர் பல முறை நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இறுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் வீடுகளை காலி செய்யுமாறும் காலி செய்த வீடுகளுக்கு பதிலாக கோவை கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்து தந்துள்ளதாக அறிவுறுத்திய அதிகாரிகள், 15 நாட்களில் காலி செய்யாத பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும் எனவும் எச்சரித்திருந்தனர். 



எனினும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளில் பெரும்பாலானோர் தங்கள் குடியிருப்புகளை காலி செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சுமார் நான்கு ஜே.சி.பி. மற்றும் இரண்டு டிராக்டர் வாகனங்களைக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று 132 வீடுகள் இடிக்கப்பட்டு வரும் சூழலில் மீதமுள்ள 120 வீடுகளின் உரிமையாளர்கள் நோட்டீசு வாங்க மறுத்துள்ளதாகவும், அவர்களது வீடுகள் ஓரிரு நாளில் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...