திருப்பூர் : திருப்பூர் அருகே பழைய அட்டைப் பெட்டி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் நெருப்பரிச்சல் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் அங்கேரிபாளையம் சாலையில் மறுசுழற்சி செய்வதற்காக பழைய அட்டைப் பெட்டிகளை வாங்கி விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார். இவரது இந்த குடோனில் நேற்று மாலை எதிர்பாராதவிதமாக, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு தண்ணீர் வாகனங்கள் மூலம் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயை அணைக்கும் பணிக்கு இடையே கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால், தீயணைப்பு வீரர்களும் தீயின் மையப்பகுதிக்கு செல்ல முடியாமல் போனதால் தீயணைக்கும் பணிகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.