திருப்பூர் : திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அனுப்பர்பாளையம், கலைவாணி தியேட்டர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் கடையானது திறக்கப்பட்டது. இங்கு மது அருந்தும் குடிமகன்கள் குடிபோதையில் நிர்வாணமாக சாலையில் படுத்துக் கிடப்பதோடு, அவ்வழியே பள்ளி கல்லூரிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் குடிமகன்கள் போதையில் அவ்வழியே செல்பவர்களை ஆபாசமாக பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.