சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்களின் பேரணி : வாகனங்களில் வந்தவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் அவசியத்தையும், வனங்களின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் அவசியத்தையும், வனங்களின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த பேரணியானது, கல்லாரில் இருந்து தொடங்கி ஓடந்துரை வரை நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள வனங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து துணிப்பையினை பயன்படுத்தவும் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் கோசங்களை எழுப்பியவாறு உதகை - மேட்டுப்பாளையம் முக்கிய சாலை வழியே பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடத்தினர். 



மேலும், மேட்டுப்பாளையம் - உதகை வழிச்சாலைகளைப் பயன்படுத்தி அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகளை நிறுத்திய மாணவர்கள், அவர்களுக்கு இயற்கையின் அவசியத்தையும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க செய்ய வேண்டியது குறித்து கூறி இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...