கோவை : கோவை மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்குப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியை இன்று சந்தித்து கோவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவையில் தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் கோவையில் கடுமையான குடிநீர் பஞ்சம் இருப்பதால், குடிநீர் பஞ்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பற்றாக்குறை இருக்கும் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினேன்.

மேலும், எருகம்பெனி, ஜீவா நகர் பகுதியில் நீண்டகாலமாக இருக்கும் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது. குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்திற்கு இடம் பெயர்பவர்களை தவிர அதே இடத்தில் தான் இருப்போம் என சொல்பவர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு கொண்டுள்ளேன். மேலும், தற்போது அங்கு வசிப்பவர்களை அங்கேயே குடியிருக்க அனுமதி வேண்டும். நீதிமன்றத்திற்கு சென்று மாற்று உத்தரவை பெறும் வரை காத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
கோவை மாநகரத்திற்குள் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடப்பதால், இதனை தடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிப்புப் பணியை அதிகரிக்க வேண்டும். பீளமேடு பகுதியில் சுரங்கப்பாதை கட்டாத காரணத்தால் மக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக, சுரங்கப்பாதை அமைக்க இடம் பெறுவது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளரை இன்று சந்தித்து முறையிட இருக்கிறேன், என அவர் தெரிவித்தார்.