ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

கோவை : ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்ட பின் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.


கோவை : ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்ட பின் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள், பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத் திருநாள் ஆகிய இரு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், கோவையில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகை திருநாள் இன்று ஜாக் கமிட்டி மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆகியவை சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹிஜ்ரி கமிட்டி சார்பில் குனியமுத்தூர் பகுதியிலும், ஜாக் கமிட்டி சார்பில் குனியமுத்தூர் ஆயிஷா மஹால் பகுதியிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை தெரிவித்துக் கொண்டனர். 



மேலும், இன்றைய தினம் ஏழைகளுக்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரபு நாடுகளில் பிறை தெரிந்தன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இருக்கும் பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடதக்கது. பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதால், நாளைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...