Exclusive: கோவையில் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய சைல்ட் லைன் அமைப்பினர்

கோவை : ஆலாந்துறை அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன்,சமூக நலத்துறை மற்றும் மற்றும் காவல் துறையின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.


கோவை : ஆலாந்துறை அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன்,சமூக நலத்துறை மற்றும் மற்றும் காவல் துறையின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க நம் நாட்டில் பல்வேறு புரட்சிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை தற்போது வரை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. மேலும், இந்த குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் கல்வி, உரிமை, மனம், உடல் ஆகியவை பாதிக்கப்படுவதால் இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை ஒழிக்க நம் அரசு 1929இல் குழந்தை திருமண தடைச் சட்டத்தை கொண்டு வந்தது.

பின்னர், சில ஆண்டுகளுக்கு பின்பு தெளிவான வயது வரம்பை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணும், 21 வயது பூர்த்தி அடைந்த ஆணும் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரையறுத்தது. இப்படி குழந்தை திருமணத்தை தடை செய்து அரசு பல்வேறு சட்டங்களை வகுத்தாலும் இன்னும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததை தற்போது வரை நடைபெறும் திருமணங்கள் வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாதம் 8 முதல் 10 குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகிறது. இப்படி நடைபெறும் திருமணங்கள் பற்றி தகவல் அறியும் பட்சத்தில், சைல்டு லைன் அலுவலர்களும், சமூகநலத்துறை மற்றும் காவல் துறையும் இணைந்து தடுத்து வருகின்றனர்.

இப்படியிருக்க கோவை மாவட்டத்திலுள்ள ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நாளை அதே பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த திருமணம் தொடர்பாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த சைல்ட் லைன் கவுன்சிலர் ஏஞ்சலினா, அதிகாரி சுலேகா தலைமையிலான குழுவை சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் சமூகநலத்துறை அதிகாரி மற்றும் காவல் துறையினரும் சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பெற்றோர்களுக்கு குழந்தைத் திருமணம் தவறு என புரிய வைக்கப்பட்டது. இதையடுத்து, திருமணத்தை 18 வயது பூர்த்தி அடையும் வரை நிறுத்திக் கொள்வதாக பெற்றோர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இதனால், 16 வயது சிறுமிக்கு ஆறாம் தேதி நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...