கோவை : கோடைகால குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக தலைமைப் பொறியாளர் என்.நடராஜ், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமைப் பொறியாளர், நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போதுள்ள சூழ்நிலையில் பெறப்படும் குடிநீர் ஆதாரங்கள் படி சராசரி குடிநீர் தினசரி 180 மி.லி. ஆக உள்ளதால், இதனைக் கொண்டு குடிநீர் விநியோக கால இடைவெளி நாட்கள் குறைத்து விநியோகம் செய்வது மற்றும் சீரான குடிநீர் விநியோகத்தினை உறுதிப்படுத்திடவும், விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடிநீர் விநியோக நேரத்தினை குறைத்து, கால இடைவெளி நாட்கள் குறைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்தல், குடிநீர் கசிவுகள் உடனுக்குடன் சரிசெய்தல், குடிநீர் வீணாவதை தடுத்தல், உதவிப் பொறியாளர்கள் ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் குடிநீர் வால்வு திறப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து குடிநீர் விநியோகம் சீர் செய்தல், குடிநீர் விநியோகத்தின் போது மோட்டார் பயன்படுத்தி நீர் உறுஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து மோட்டார் பம்பு செட் பறிமுதல் செய்யப்பட வேண்டும். குடிநீர் விநியோக ஆட்கள் சரிவர பணியினை மேற்கொள்ளவில்லை எனில், மேற்படி நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தேவையான அளவு குடிநீரில் குளோரினேசன் இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். இக்கோடைகாலத்தில் குடிநீர் பகிர்மானக் குழாய் மூலம் முழுமையாக குடிநீர் வழங்க இயலாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
மேலும், உதவிப் பொறியாளர்கள் நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகளுக்கு கோடை காலம் முடியும் வரை களஆய்வு மேற்கொண்டு விநியோக பகுதிகளில் புகார்களை உடனடியாக சரி செய்யவும் மேற்படி புகார்களை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் மேற்படி உதவி பொறியாளர்கள் ஆய்வினை கண்காணிப்பு செய்திட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.