கோவை : பீளமேடு கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் கணினி கோளாறு காரணமாக, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

கோவை மின் பகிர்மானம் மாநகர் வட்டம் நகரிய கோட்டத்திற்குட்பட்ட பீளமேடு கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளான காந்திநகர், லால்பகதூர் நகர், பாலன் நகர், அண்ணா நகர், ஸ்ரீநகர், ஹோப் காலேஜ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்திற்கான மின் பயன்பாட்டிற்கான கணக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 25-ம் தேதிக்குள் கையடக்க கருவி மூலம் கணக்கெடுக்க வேண்டும். அதுபோல, கடந்த ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதத்திற்கான கணக்கீடு கடந்த 25-ம் தேதிக்குள் கணக்கெடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் தற்போது மின்கட்டணம் செலுத்த செல்லும் போது பிரிவு அலுவலகத்திலுள்ள கம்யூட்டரில் செலுத்த வேண்டிய மிக் கட்டணம் ஏதும் பதிவாகாததால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
இது குறித்து பிரிவு அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, "மின்பயன்பாடு குறித்த கணக்கீடுகள் கடந்த வாரமே கணக்கெடுத்து அலுவலக கம்யூட்டரில் பதிவு செய்ய முற்பட்டோம். மின்வாரிய கம்ப்யூட்டரில் சர்வர் சரியாக வேலை செய்யாததால், செலுத்த வேண்டிய கட்டணம் பதிவு செய்ய முடியவில்லை. தலைமை அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவு கம்ப்யூட்டரில் சரி செய்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என தெரிவிப்பதால், இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் திரும்பிச் செல்கின்றனர்," என்றனர்.