கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 நடுநிலைப்பள்ளிகளில் முதல்முறையாக மழலையர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 நடுநிலைப்பள்ளிகளில் முதல்முறையாக மழலையர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்கள் கண்டறியப்பட்டு, அந்த மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட சங்கனூர், டாடாபாத், கோட்டை, வெட்ரபன் பேட்டை, ஆர்.எஸ்.புரம், பாப்பநாயக்கன் பாளையம், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தம் இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 140 மாணவர்களும், யூ.கே.ஜி. வகுப்புகளில் 170 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு நண்பகல் 12 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பின்னர், அவர்கள் அங்கன்வாடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மொத்தம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 13 நடுநிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.