திருப்பூரில் பணியில் இருந்த பெண் காவலர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மாற்றுத்திறனாளி கைது

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டார். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது, ஊரக பெண் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு அருகில் நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடியும், செல்பி எடுப்பது போலவும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவர் தங்களை புகைப்படம் எடுப்பதை உணர்ந்த பெண் காவலர்கள், அந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவர் தனது செல்போனில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்கினார். இதனைக் கண்ட மற்ற போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சோதனை செய்தனர். அதில், பெண் காவலர்களை அந்த இளைஞர் ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.



இதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (34) என்பதும், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...