கோவை : பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்புத் துறையில் பதிவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2018-2019 ஆண்டு 10 வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு, பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்புத் துறையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்யப்பட்ட சான்றுகளை தலைமை ஆசிரியர் திருமதி ஜி. இந்திரா மாணவிகளுக்கு இன்று வழங்கினார்