போகியத்திற்கு கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : போகியத்திற்கு கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றி வரும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : போகியத்திற்கு கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றி வரும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கணபதி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் விஜயகுமார். இவரது குடியிருப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் நான்கு குடும்பங்கள் சில வருடங்களுக்கு முன்பு போகியத்திற்கு குடி வந்தது. போகிய தொகையாக மூன்றரை லட்சம் கொடுத்ததாகவும், வீட்டை காலி செய்யும் போது தொகையை திருப்பி தருவது என ஒப்பந்தம் உள்ள நிலையில், வீட்டின் உரிமையாளரான விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது தேவைக்காக வங்கி மூலம் கடன் பெற்று உள்ளதாக தெரிவித்தனர்.



வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாத காரணத்தினால் வங்கி மூலம் ஏலம் விடப்பட்ட வீட்டை துரைராஜ் என்பவர் வாங்கி உள்ளார். தற்போது, அந்த வீட்டை வாங்கிய நபர் வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தாங்கள் போகியத்திற்கு பணம் கொடுத்து உள்ளோம் எனக் கூறிய போது, அதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, உடனடியாக காலி செய்யுங்கள் என மிரட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து விஜயகுமாரிடம் கூறினால், வீடு விற்கப்பட்டு விட்டது. உடனடியாக காலி செய்யுங்கள் என ஆட்களை வைத்து மிரட்டுவதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறும் பாதிக்கப்பட்டவர்கள், போகியத்திற்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும், அதுவரை அங்கேயே குடியிருக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...