கோவை : பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக பல்வேறு மனுக்களைப் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் வளாகம் குப்பைகளால் நிரம்பி வழிவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் மையப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, திங்கட்கிழமை நாட்களில் மனுநாள் என்பதால், கூடுதலான மக்களின் கூட்டமும் தென்படுகிறது.

இந்த சூழலில், கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பொது சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. குறிப்பாக, கருவூல அலுவலகம் அருகே மலை போல் குவிந்த குப்பைகள் அகற்றப்படாமல் காட்சி அளிக்கிறது. அதிக அளவு பொதுமக்கள் அதிலும் முதியவர் வரும் இடத்தில் இந்த குப்பை மலையால் தொற்று நோய் அபாயம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் முன்மாதிரி அலுவலகமாக இருக்க வேண்டிய ஆட்சியர் அலுவலகமே இப்படி குப்பை குவியல்களின் பிறப்பிடம் போல இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு பொது சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.