முறையான சம்பளம் வழங்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனியார் நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : முறையாக சம்பளம் வழங்காத தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை : முறையாக சம்பளம் வழங்காத தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் சர்வால் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. காகித மெஷின்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாகம் முறையாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் அங்கு பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்காமலும், தொழிலாளர்களிடத்தில் ஓய்வூதியத் தொகை மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி செலுத்தாமல் உள்ளதால், மருத்துவ உதவி கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். 

இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் நேரிடையாகவும், தொழிலாளர் நலத்துறை மூலமாக பேசியும், இதுவரை தீர்வு ஏற்படாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யு மற்றும் பி.எம்.எஸ் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் மனு அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...