கோவை : தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் நிறுவனங்களால் மாசு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி விவசாயிகள் தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்து வந்து கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுக்கரை வட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி அருகே உள்ள ஓராட்டு குப்பை பகுதிகளில் தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களால் மாசு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தேங்காய் தொட்டிகளை மாலையாக கோர்த்தபடி வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "ஓராட்டு குப்பை கிராமத்தில் நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் மாசு ஏற்படுகிறது. இதனால், அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்நிறுவனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினார்.