கொலை செய்யப்பட்டது நிரூபணமானால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் : பழனிச்சாமியின் குடும்பத்தினர் திட்டவட்டம்

கோவை : மறுபிரேதப் பரிசோதனையில் மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை : மறுபிரேதப் பரிசோதனையில் மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 3-ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் இன்று மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் மற்றும் மனைவி சாந்தாமணி ஆகியோர் பேசியதாவது :- மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பழனிச்சாமியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால், அவரது உடலை எரித்து விடப்போவதாக காரமடை உதவி ஆய்வாளர் நாகராஜ் என்பவர் மிரட்டுகிறார். எனவே, பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவரது அறிவுரையின் பேரில் அரசு மருத்துவனை தலைவரிடமும் மனு அளிக்க உள்ளோம். 



மேலும், நீதிமன்ற நடைமுறைகள் அமலில் இருக்கும் போது, மார்ட்டினின் தூண்டுதலால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று மிரட்டி வருகின்றனர். மறு பிரேதப் பரிசோதனையில் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம். தங்களை எந்த அரசியல் கட்சியும் இயக்கவில்லை, என அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...