மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவருக்கு வழங்க வேண்டிய இழப்பீடுத் தொகையைப் பெற்றுத் தரக்கோரி பெண் கண்ணீர் மல்க மனு

கோவை : கோவையில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனின் இழப்பிற்கு வழங்குவதாகக் கூறியிருந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்று தரகோரி கணவரை இழந்த பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை : கோவையில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனின் இழப்பிற்கு வழங்குவதாகக் கூறியிருந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்று தரகோரி கணவரை இழந்த பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருச்சி அருகே மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள், வடவள்ளி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் ரகுபதி, ரேவதி, மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் வடவள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வருடம் ஒண்டிப்புதூர் அருகே உள்ள கட்டுமானப் பணி வேலைக்கு கொத்தனார் பழனிச்சாமி என்பவர் மூலம் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி, கடப்பாரையால் மண்ணைத் தோண்டிய போது, நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், பலத்த காயத்துடன் மயக்கமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.



இதையடுத்து, பெரியசாமியின் குடும்பத்திற்கு வீட்டின் உரிமையாளர் மாணிக்கவாசகம் இழப்பீட்டுத் தொகையாக 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அவரது வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகம். ஆனால், வழக்கறிஞர் காசோலையின் நகலை பெரியசாமியின் குடும்பத்திடம் கொடுத்துவிட்டு, பின்னர் அசல் காசோலையைத் தருவதாக உறுதியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தற்போது வரை அசல் காசோலையைக் கொடுக்காமல், மாணிக்கவாசகம் தரப்பினர் ஏமாற்றி வருவதாகவும், இழப்பீட்டுத் தொகையைக் கேட்டால், சட்ட ரீதியாகப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறுவதாகவும் பெரியசாமியின் மனைவி லட்சுமி கூறுகின்றனர். 

இந்த நிலையில், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கு தருவதாக வாக்குறுதி அளித்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...