சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் நீதிமன்றத்திற்கு வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அறப்போர் இயக்கத்திற்கு தடைக் கோரியும், ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.