கோவை : வேடப்பட்டி அருகே மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேடப்பட்டி அருகே இருக்கும் நஞ்சப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (65). இவர் பூ மார்க்கெட் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி செய்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி சுப்பாத்தாளுக்கும் (60) மாரிமுத்துவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மாரிமுத்துவின் தம்பி கிருஷ்ணன் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், அவரை கவனித்துக் கொள்வதில் சுப்பாத்தாள் மெத்தனம் காட்டுவதாக பலமுறை அடிதடி வரை சென்றுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் இருவருக்கும் இடையான வாய்த்தகராறு முற்றியது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து மனைவி சுப்பாத்தாள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது சமையல் சிலிண்டரை எடுத்து தலையில் போட்டார். இதில், மனைவி சுப்பாத்தாள் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து, நிதானம் அடைந்த மாரிமுத்து மனைவியை கொலை செய்த வேதனையில், வீட்டின் வெளியே இருந்த நைலான் கயிறை அறுத்து, வீட்டின் வெளியே உள்ள விட்டத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதங்களைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேடப்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.