கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் புதிய சீருடைகளை அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் புதிய சீருடைகளை அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

2 மாத கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் புதிய சீருடைகளை அணிந்தும், புதிய புத்தகப் பைகளிடன் புதிய பாடங்களை படிக்கும் ஆர்வத்தில் இன்று பள்ளிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளிகளுக்கு சென்று புதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளனர்.

நடப்பாண்டில், கோடை வெயிலில் தாக்கம் அதிகம் இருப்பதால், பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர், மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்தி பள்ளிக் கல்வித் துறை, திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளை தவிர்த்து அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

கடந்த 2018-ம் ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததால், பள்ளிகள் திறப்பு ஜூன் 3-க்கு பதிலாக ஜூன் 7-க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
