உதகை தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்த 10.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள்

கோவை : கடந்த ஆண்டை நடப்பு கோடை சீசனில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கோவை : கடந்த ஆண்டை நடப்பு கோடை சீசனில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 10.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி சிறந்த கோடை வாசஸ்தலமாக திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை சீசனை அனுபவிக்கவும், பூங்காக்களில் பூத்து குலுங்கும் பல்வேறு வண்ண மலர்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர்.



நடப்பாண்டில் கோடை விழா கடந்த மே மாதம் 1-ந் தேதி கலைநிகழ்ச்சியுடன் ஊட்டியில் தொடங்கியது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், வர்க்கி, சாக்லேட் மற்றும் வெம்மை ஆடைகள் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் வாங்குவதற்காக நைட் பஜார் தாவரவியல் பூங்காவில் செயல்பட்டது. அங்கு சுற்றுலாப் பயணிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல், நடனம், கவிதை உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கோடை சீசனையொட்டி சேரிங்கிராசில் புகைப்பட கண்காட்சி நடந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி கடந்த 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் பழ கண்காட்சி நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக, போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்று பேருந்துகள் இயக்கப்பட்டன.



நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், மே மாத தொடக்கத்தில் இருந்து கலைநிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த 27-ந் தேதி முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, பரதநாட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றது.



கோடை சீசனையொட்டி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்து உள்ளனர். கடந்த ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர் என்று தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். இதனை பார்க்கும் போது, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தங்கும் விடுதிகளில் பலமடங்கு வாடகை உயர்வு, ஆட்டோ கட்டணம் உயர்வு, போக்குவரத்து நெரிசல் போன்றவை இருந்தும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...