ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

கோவை : மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவை : மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சுல்தான்பேட்டை, பொங்கலூர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் உள்ளடக்கிய பகுதிகளில் சமீபகாலமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலை தொடருமானால் விவசாயப் பகுதியான இப்பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். இப்பகுதி விவசாயிகளின் 40 ஆண்டு கோரிக்கை ஆனைமலை - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது. இது ஒன்றே நிரந்தர தீர்வாகும். தேர்தல் காலத்தில் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், வேட்பாளர் என்கிற முறையில் நானும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பெரும்பகுதி விவசாயிகள் பெரும் பயனடைவர். கேரள மாநிலம் என்.ஓ.சி. தரவில்லை என்கிற ஒரு சிறிய காரணத்திற்காக இத்திட்டம் தாமதமாகியுள்ளது என்பது ஏற்புடையதாக இல்லை.

இத்திட்டத்தினால் கேரள மாநிலத்திற்கு எந்த பாதிப்பு ஏற்படப்போவதில்லை. தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை மனதில் கொண்டு கேரள மாநில அரசோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் முன்வைக்கிறேன். அதேநேரத்தில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நானும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கிற ஆலோசனை கூட்டம் ஜூன் 30 ஆம்தேதி அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கலந்து பேசிய பிறகு முறைப்படி அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து கோவை சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பொருத்தமான ஒரு இடத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...