கோவையில் அரசு மருத்துவமனையின் செவிலியர் மர்ம மரணம் : கொலை வழக்காகப் பதிவு செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

கோவை : சூலூர் அருகே வசித்து வரும் அரசு மருத்துவமனையின் செவிலியர் மர்ம மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை : சூலூர் அருகே வசித்து வரும் அரசு மருத்துவமனையின் செவிலியர் மர்ம மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



சூலூர் கலங்கல் சாலையில் உள்ள விவேகானந்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் முரளி சங்கர் (27) மற்றும் பாண்டி மீனா(24). இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில், பாண்டிமீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணியாற்றி வந்தார். இப்படியிருக்க பாண்டி மீனாவுக்கும், அவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து, பாண்டி மீனாவின் பெற்றோருக்கு முரளி சங்கரின் வீட்டார், பாண்டி மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த பாண்டி மீனாவின் பெற்றோர் இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு வந்தனர். 



இதில், உயிரிழந்த தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், ஆகவே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, மீனாவின் பெற்றோர் கணவர் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சூலூர் காவல் நிலையத்தில் மீனாவின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர், பாண்டி மீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், போலீசார் கணவர் முரளி சங்கர் மற்றும் அவரது தந்தை கணேஷ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, உறவினர்கள் கொலை வழக்காகப் பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வரதட்சணை கொடுமையால் தான் கொலை செய்துள்ளனர் என செவிலியரின் உறவினர்கள் கணவர் மற்றும் கணவரின் வீட்டார் மீது குற்றம்சாட்டி உள்ளனர். சுமார் அரை மணி நேரமாக நடைபெற்று வரும் சாலை மறியலால் கோவை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Links : கோவையில் அரசு மருத்துவமனையின் செவிலியர் மர்ம மரணம் : கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...