கோவை : சரவணம்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக ஏற்பட்டு வரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில், சாலையில் செல்லும் பொது மக்கள் முதல் வீட்டில் இருக்கும் பொது மக்கள் வரை வெயில் மற்றும் அனல் காற்றினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் ஏற்படும் உஷ்ணத்தினால் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
அதேபோல, இந்த வெயில் காலங்களில் மின்சாரமின்றி வீடுகளில் இருப்பது சிரமம். ஒவ்வொரு வீடுகளிலும் 24 மணி நேரமும் பேன்,ஏசி போன்றவை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் பொதுமக்கள் உஷ்ணத்தால் துயரத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில், கோவை சரவணம்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தினமும் பத்து முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மின்வெட்டு பாதிப்பினால் சரவணம்பட்டி ,கிருஷ்ணாபுரம், விளாங்குறிச்சி, அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல, இரவு நேரங்களில் மின்வெட்டானது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிப்பதால் பொதுமக்கள் தூக்கங்களை இழந்து காலை வழக்கம் போல தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சரவணம்பட்டி சிவானந்த மில் பகுதியை சேர்ந்த இளைஞர் கௌதம் ராஜ் கூறியதாவது ;-சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் ஏற்படும் இந்த மின்வெட்டால் தூக்கத்தை இழந்து உள்ளோம். கடந்த 5 நாட்களாக தூக்கமின்றி வேலைக்கு செல்கிறோம். இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஆவதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. சரவணம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி பராமரிப்பு பணிகள் குறைபாடால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ஃபேன் போட்டு தூங்கும் பொழுது கொசுக்கள் வீடுகளில் உலாவுவது இல்லை. ஆனால், ஒரு நிமிடம் ஃபேன் ஓடவில்லை என்றாலும், கொசுக்கள் வீடுகளுக்குள் புகுந்து கடிக்க ஆரம்பித்து விடுகிறது. இப்படி மின்வெட்டால் கொசுக்கடி, உஷ்ணம், தூக்கமின்மை, உடல் சோர்வு என பல்வேறு பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றோம். இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் போராடுவதை தவிர வேறு வழியில்லை, என தெரிவித்தார்.

அதேபோல சரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவி சாந்தி கூறியதாவது ;- கடந்த ஐந்தாறு நாட்களாக எங்கள் பகுதியில் கரண்ட் அடிக்கடி கட் ஆகிறது. இதனால், வீட்டில் இருந்து எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. அதேபோல, எங்கள் பிள்ளைகளும் கரண்ட் கட்டினால் இரவு நேரங்களில் தூக்கம் இன்றி தவிக்கின்றனர். விரைவில் இந்த கரண்ட் கட் பிரச்சனை சரியாக வேண்டும், என தெரிவித்தார். இவ்வாறு மின்வெட்டின் பாதிப்பினால் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். இப்படி புகார் அளிக்கும்போது அதிகாரிகள் விரைவில் சரியாகிவிடும் என தெரிவிக்கின்றனர்.
இந்த மின்வெட்டு குறித்து சரவணம்பட்டி பகுதி உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் கூறியதாவது ;- கடந்த 4 நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பவர் டிரான்ஸ்பார்மர் ஒன்று பழுதாகி உள்ளது. மேலும், டிரான்ஸ்பார்மரில் உள்ள ஆயில் குறைந்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ட்ரான்ஸ்பார்மர் அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாட்களுக்குள் மின்வெட்டு பிரச்சனை தீரும், என தெரிவித்தார்.