கோவை : கோடை கால குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பிரதான அரங்கில் நடந்த இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போதுள்ள சூழ்நிலையில் பெறப்படும் குடிநீர் ஆதாரங்கள்படி சராசரி குடிநீர் தினசரி 180 அ மி.லி. ஆக உள்ளதால், இதனைக் கொண்டு குடிநீர் விநியோக கால இடைவெளி நாட்கள் குறைத்து விநியோகம் செய்வது மற்றும் சீரான குடிநீர் விநியோகத்தினை உறுதிபடுத்திடவும், விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மே 31-ம் தேதி அன்று சென்னையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கிய அறிவுரைப்படி குடிநீர் விநியோகத்தினை ஒழுங்குபடுத்திட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கினார்.
1. குடிநீர் விநியோக நேரத்தினை குறைத்து, கால இடைவெளி நாட்கள் குறைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்தல்.
2. குடிநீர் கசிவுகள் உடனுக்குடன் சரிசெய்தல், குடிநீர் வீணாவதை தடுத்தல்.
3. உதவிப்பொறியாளர்கள் ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் குடிநீர் வால்வு திறப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து குடிநீர் விநியோகம் சீர் செய்தல்.
4. குடிநீர் விநியோகத்தின் போது மோட்டார் பயன்படுத்தி நீர் உறுஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து மோட்டார் பம்பு செட் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
5. குடிநீர் விநியோக ஆட்கள் சரிவர பணியினை மேற்கொள்ளவில்லை எனில், மேற்படி நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6. தேவையான அளவு குடிநீரில் குளோரினேசன் இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
7. இக்கோடைகாலத்தில் குடிநீர் பகிர்மானக் குழாய் மூலம் முழுமையாக குடிநீர் வழங்க இயலாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
மேலும், நாளை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக தலைமைப் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது தற்போது கிடைக்கக் கூடிய குடிநீர் ஆதாரத்தினைக் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்க தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட உள்ளனர். மேலும், குடிநீர் விநியோகம் தொடர்பான பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் கண்டறிந்து சீரான முறையில் குடிநீர் வழங்கிட அனைத்து பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பணியாளர்கள் எவ்வித விடுப்பின்றி பணிபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் குடிநீர் தொடர்பான தங்களது குறைகளை கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்கள்:
1. மாநகராட்சி பிரதான அலுவலகம் - 0422- 2302323
2. டி.ஜே.நகர் டேங்க் - 0422- 2572492
3. கணபதி எம்.எஸ்.ஆர். டேங்க் - 0422- 2511911
4. பாரதி பார்க் டேங்க் - 0422- 2442236
5. காந்தி பார்க் டேங்க் - 0422- 2471009
6. சாரதா மில் டேங்க் - 0422- 2676700
7. புலிய குளம் டேங்க் - 0422- 2316267
8. கிழக்கு மண்டல அலுவலகம் - 0422- 2577056
9. மேற்கு மண்டல அலுவலகம் - 0422- 2551700
10. வடக்கு மண்டல அலுவலகம் - 0422- 2243133
11. தெற்கு மண்டல அலுவலகம் - 0422- 2252481
12. மத்திய மண்டல அலுவலகம் - 0422- 2215618
என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்கள்.