இந்து தீவிரவாதி குறித்த சர்ச்சை பேச்சு வழக்கு: கமலுக்கு முன் ஜாமீன் வழங்கியது கரூர் நீதிமன்றம்

கரூர் : இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


கரூர் : இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரவக்குறிச்சியில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று கூறினார். தேர்தல் சமயத்தில் கமலின் இந்த பேச்சு மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கமல் சார்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மே 20ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி, நேற்று (ஜூன் 1) கமல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி விஜய் கார்த்தி உத்தரவிட்டார். கமலின் வருகையை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...